ஏப்ரல் 20 க்கு மேல் இந்தத் தொழில்கள் இயங்கலாம் என்ற விவரங்களை அரசு வெளியிட்டது.... நீங்களும் தெரிஞ்சுக்கோங்க?

ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது, மத்திய அரசு

* ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி

* கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை - மத்திய அரசு 

* விவசாய உபகரணங்கள், உரங்கள் விற்பனை நிலையங்கள் செயல்படலாம்

* விவசாயப் பொருள் போக்குவரத்து தங்குதடையின்றி நடைபெறுவதை மாநில அரசுகள் உறுதி செய வேண்டும்

* மீன்பிடித் தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி

* தேயிலை, காஃபி, ரப்பர் உற்பத்திப் பணிகளை 50 சதவீத ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம்

* பால் உற்பத்தி மற்றும் விநியோகம் வழக்கம் போல நடைபெறலாம்

* ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்படி வங்கிகள், ஏ.டி.எம்-கள் செயல்படும்

* கல்வி நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம்

* அத்தியாவசியப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்க தடை இல்லை

* ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி

* 100 நாள் வேலை திட்டத்தின்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்

* ஊரகப் பகுதியில் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்கலாம்

* ஊரகப் பகுதியில் சிறு, குறு தொழில் சார்ந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்

* லாரிகள் பழுதுபார்க்கும் பட்டறைகள் இயங்க அனுமதி

* நெடுஞ்சாலைகளில் உள்ள தாபாக்கள் சமூக இடைவெளியுடன் இயங்க அனுமதி

* தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை

* பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம்

* 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட கூடாது - மத்திய அரசு

* பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்

* எலக்ட்ரீசியன், பிளம்பர்,  மெக்கானிக்குகள், மரவேலை செய்பவர்கள் பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்
#COVID19 | #StayHome | #Lockdown2

Comments

Popular posts from this blog

கொரோனா நிதி! 3 கோடி கொடுத்ததற்கு வருத்தப்பட்ட லாரன்ஸ் காரணம் தெரியுமா?