வாழ்க்கையில் ஜெயிக்க இந்த மந்திரம் போதும்.
ஒரு நாட்டின் ராஜாவுக்கு
ஒரு நாள் சிந்தனை ஒன்று தோன்றியது ,
அதாவது,
தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு ,
அவனை காப்பாற்றக்
கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும் ? என்பதே அந்த சிந்தனை.
மன்னனும் எவ்வளவோ முயன்றும்,
அப்படி ஒரு மந்திரம் என்னவென்றே தெரியவில்லை ,
உடனே,
நாட்டு மக்களுக்கும் பறையறிவிக்க சொன்னான்.
வாழ்வின் பொருளாதார துன்பத்தில்
சிக்கி இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை சொல்பவருக்கு,
தனது நாட்டில் ஒரு பகுதியையே தருவதாகவும் அறிவித்தான்.
நிறைய பேர் தினமும் அரசவைக்கு வரத் துவங்கினார்கள்...
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள்.
நமசிவாய
என்றார்
ஒருவர்.
ஜீஸஸ்
என்றனர்,
அல்லா
என்றனர்,
உன்னையே
நம்பு என்றார் இன்னொருவர்.
ஆனால்,
மன்னனோ திருப்தியாக
வில்லை .
எல்லோரும் சொன்னதை ஏதாவது ஒரு காரணம் சொல்லியே மறுத்தான்.
அவர்களின்
பதிலில் அவன் மனம் ஏனோ, சமாதானமாக
வில்லை.
இந் நிலையில் ஒருநாள் மன்னனைக்
காண ஒருவன் வந்தான்.
அவன்
மன்னனிடம்
ஒரு மோதிரத்தை தந்து,
மன்னா !
நீங்கள் எந்த குறையுமின்றி
நீடுழி வாழ வேண்டும்,
ஒருக்கால்
நீங்கள்
சொன்னது
போல,
ஒரு நிலை உங்களுக்கே வருமானால்,
அன்றைய
தினமே,
இந்த மோதிரத்தை
திறந்து பாருங்கள்...
அதுவரை
இதனைப்
பார்க்க
வேண்டாம் என்று சொல்லி மோதிரத்தை
மிகவும் பவ்யமாகவே மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.
மன்னனுக்கு
அந்த
மனிதனின் சொல்லும்,
செயலும், ஒரு விதமான நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் , மன
அமைதியையுமே தந்தது.
இந்த
சம்பவத்திற்கு பின்னர்,
மன்னனோ
இதனை மறந்தே போனான்.
சில வருடங்களுக்குப்
பின்...
திடீர் என இந்த மன்னனுக்கும்,
பக்கத்து நாட்டு மன்னனுக்கும்
போர் மூண்டது.
தயார்
நிலையில் இல்லாததால்,
இந்த மன்னன் அந்த போரில் தோற்றுப் போனான்.
நாடு ,
மனைவி ,
மக்களை இழந்த மன்னன்
மிகவும் மனம் தளர்ந்தே வாழ்வினை முடித்துக்
கொள்ளவே எண்ணினான்.
தப்பித்து
உயிர் பிழைத்த
தன் நிலையை எண்ணியே பெரும் சஞ்சலமான மன்னன்...
தூரத்தில்
ஒரு மலை உச்சியினை கண்டான்...
இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ள
தீர்மானித்த அந்த மன்னன் மலை
உச்சியின் மீதேறினான்.
தட்டுத் தடுமாறி மலையின்
உச்சியை அடைந்த மன்னனோ,
இறைவா,
என்னை ஏற்றுக்கொள்
என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப்
பார்த்தே,
உரக்க கூவினான்.
அப்போது தான்
அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னிவதைக் கண்டான்.
உடனே,
அவன் மனதில்,
அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ரீங்காரமாகவே ஒலித்தன.
மன்னா !
நீங்கள் எந்த குறையுமின்றி
நீடுழி வாழ வேண்டும்,
ஒரு வேளை
நீங்கள்
சொன்னது
போலவே,
ஒரு நிலையே உங்களுக்கு வருமானால்,
அன்றைய
தினம் இந்த மோதிரத்தை
திறந்து பாருங்கள்...
அதுவரை
இதனை
பார்க்க
வேண்டாம்,
இப்போதே அது போன்ற நிலை தானே ?
அதில் என்ன
தான் உள்ளது
என்று பார்ப்போம்...
என்று
தற்காலிகமாக
கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு
விட்டு,
ஒரு ஓரமாக மர நிழலில்
அமர்ந்து,
அந்த மோதிரத்தை
திருப்பி உள்ளே என்ன
இருக்கிறது என ஆர்வமாகவே பார்த்தான்.
மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்
பட்டிருந்தது,
அதனை
மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து படித்துப்
பார்த்தான்...
ஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்
பட்டிருந்தது .
அந்த வாசகம் இதுதான்...
" *இந்த நிலை மாறும்*..."
அவ்வளவு
தான், வேறொன்றுமே இல்லை.
நான்கைந்து முறை முன்னும்
பின்னும்
திருப்பிப் பார்த்த பிறகும்,
ஏதுமே இல்லாத காரணத்தால்
அந்த ஒரு வரி வாசகத்தினை பற்றியே யோசித்தான்.
தான் தற்போது உள்ள நிலை
மாறும்,
இதற்காகவே தற்கொலை
செய்து
கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை
தைரியப்
படுத்திக் கொண்டே
மன்னன்
மலையிலிருந்து கீழிறங்கினான்...
தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான் ,
கிராமங்களில் வாழும் மக்களோ தங்களது மன்னனைக் கண்டதும்,
பெரிதும் மகிழ்ந்தே கொண்டாடினார்கள்.
இளைஞர்களை ஒன்று திரட்டி
பெரும் படையை உருவாக்கினான்.
அரண்மனையில் இருந்த அவனது பழைய படை வீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு,
எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்ளே
நுழைந்து,
எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக
கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.
மீண்டும்
மன்னன் ஆட்சியில் அமர்ந்ததும்
மக்களோ மிகவும் ஆனந்தமானார்கள்.
இந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய அந்த
மன்னன்,
இந்த
அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித்
தந்த மோதிரம் கொடுத்த அந்த
மனிதனையும் பறையறிவித்தே வரவழைத்தான்...
நாடு முழுக்க
ஒரே கொண்டாட்டமாக இருந்தது...
அரண்மனையிலோமக்கள் கூட்டம்..
அரியணையில் மன்னன்...
அருகில்
மகாராணி, மன்னனின் குழந்தைகள்,
மந்திரி, பிரதானிகள்...
ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது...
மோதிரம்
கொடுத்த
அந்த மனிதனும் வந்தான்,
மன்னனை
தாழ்ந்தே பணிந்தான்.
மன்னனோ அரியணையில் இருந்து இறங்கி வந்தே வரவேற்றான்.
தான் அறிவித்திருந்த படியே,
பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றான் மன்னன்.
மன்னா,
நாட்டினை ஆளும் பெரும் தகுதி கொண்டவர் தாங்கள் தான்,
எனக்கு ஏதும் வேண்டாம் என்று பணிவோடு சொன்னான்
அந்த மனிதன்.
மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும்
ஏற்க மறுத்தான் அந்த மனிதன்.
இறுதியாக
மன்னன் சொன்னான்,
அன்பரே ,
நீங்கள்
ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமலே கேளுங்கள்.
இப்போது
அந்த மனிதன்,
மன்னா !
இப்போது நீங்கள் வாழ்வின் மிக அதிகப் படியான சந்தோஷத்தின் உச்சியில், இருக்கிறீர்கள் ! என்பது உண்மை தானே !
மன்னனோ,
ஆம்,
நிச்சயம்
உண்மை
தான்
அன்பரே...
அப்படியானால்,
அந்த மோதிரத்தினை இப்போது
எடுத்துப் பாருங்கள் என்றான்,
அந்த மனிதன்.
உடனே,
மன்னன் தனது விரலில் இருந்த மோதிரத்தினை எடுத்து,
உள்ளிருக்கும்
அந்த சிறிய காகிதத்தை பிரித்துப்
படித்தான்.
அதில்
அதே அந்த மந்திர
வாசகம் இருந்தது.
" *இந்த நிலை மாறும்...*"
மன்னனோ விழிக்க, அந்த மனிதன்,
இது தான் மன்னா வாழ்க்கை...
இந்த நிலையும் மாறும்,
எனவே எதிலும் கவனமாகவும், சந்தோஷமாகவும் இருங்கள்...
நான் வருகின்றேன்...
என்று
அவையோரை பணிந்தே மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன்...
நெஞ்சம்
தழுதழுக்க
அவன் செல்லும் திசையையேப்
பார்த்தபடியே எழுந்து வணங்கியே நின்றான் மன்னன்.
இழந்த
வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன் !
ஆதனால்,
நமக்கும் எந்த நிலையில் இருந்தாலும்,
எந்த ஒரு முடிவெடுக்கும் முன்னரும்,
நமக்கும் இந்த மந்திர வாசகம் நினைவிலே வரட்டும்...
தற்சமயம்
இந்த கொரானா
வைரஸால் ஏற்பட்டுள்ள,
நமது தொழிலின்
நிலை குறித்து
மனம் வருந்தும் அனைவருக்குமே,
பொருந்தும்
இந்த
மந்திரச் சொல்:
" *இந்த நிலை மாறும்...!!!* "
#பகிர்வு
Comments
Post a Comment