வாழ்க்கையில் ஜெயிக்க இந்த மந்திரம் போதும்.
ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒரு நாள் சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது, தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும் ? என்பதே அந்த சிந்தனை. மன்னனும் எவ்வளவோ முயன்றும், அப்படி ஒரு மந்திரம் என்னவென்றே தெரியவில்லை , உடனே, நாட்டு மக்களுக்கும் பறையறிவிக்க சொன்னான். வாழ்வின் பொருளாதார துன்பத்தில் சிக்கி இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை சொல்பவருக்கு, தனது நாட்டில் ஒரு பகுதியையே தருவதாகவும் அறிவித்தான். நிறைய பேர் தினமும் அரசவைக்கு வரத் துவங்கினார்கள்... ஒவ்வொருவரும் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள். நமசிவாய என்றார் ஒருவர். ஜீஸஸ் என்றனர், அல்லா என்றனர், உன்னையே நம்பு என்றார் இன்னொருவர். ஆனால், மன்னனோ திருப்தியாக வில்லை . எல்லோரும் சொன்னதை ஏதாவது ஒரு காரணம் சொல்லியே மறுத்தான். அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ, சமாதானமாக வில்லை. இந் நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான். அவன் மன்னனிடம் ஒரு மோதிரத்தை தந்து, மன்னா ! நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்