Posts

வாழ்க்கையில் ஜெயிக்க இந்த மந்திரம் போதும்.

Image
ஒரு நாட்டின் ராஜாவுக்கு  ஒரு நாள் சிந்தனை ஒன்று தோன்றியது ,  அதாவது,  தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு ,  அவனை காப்பாற்றக்  கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும் ? என்பதே அந்த சிந்தனை. மன்னனும் எவ்வளவோ முயன்றும், அப்படி ஒரு மந்திரம் என்னவென்றே தெரியவில்லை ,  உடனே, நாட்டு மக்களுக்கும் பறையறிவிக்க சொன்னான். வாழ்வின் பொருளாதார துன்பத்தில்  சிக்கி இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை சொல்பவருக்கு,  தனது நாட்டில் ஒரு பகுதியையே தருவதாகவும் அறிவித்தான். நிறைய பேர் தினமும் அரசவைக்கு வரத் துவங்கினார்கள்... ஒவ்வொருவரும் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள். நமசிவாய  என்றார்  ஒருவர். ஜீஸஸ்  என்றனர், அல்லா  என்றனர், உன்னையே  நம்பு என்றார் இன்னொருவர். ஆனால்,  மன்னனோ திருப்தியாக வில்லை . எல்லோரும் சொன்னதை ஏதாவது ஒரு காரணம் சொல்லியே மறுத்தான்.  அவர்களின்  பதிலில் அவன் மனம் ஏனோ, சமாதானமாக வில்லை. இந் நிலையில் ஒருநாள் மன்னனைக்  காண ஒருவன் வந்தான். அவன்  மன்னனிடம்  ஒரு மோதிரத்தை தந்து,  மன்னா !  நீங்கள் எந்த குறையுமின்றி  நீடுழி வாழ வேண்டும்,  ஒருக்கால்  நீங்கள்  சொன்

ஏப்ரல் 20 க்கு மேல் இந்தத் தொழில்கள் இயங்கலாம் என்ற விவரங்களை அரசு வெளியிட்டது.... நீங்களும் தெரிஞ்சுக்கோங்க?

Image
ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது, மத்திய அரசு * ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி * கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை - மத்திய அரசு  * விவசாய உபகரணங்கள், உரங்கள் விற்பனை நிலையங்கள் செயல்படலாம் * விவசாயப் பொருள் போக்குவரத்து தங்குதடையின்றி நடைபெறுவதை மாநில அரசுகள் உறுதி செய வேண்டும் * மீன்பிடித் தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி * தேயிலை, காஃபி, ரப்பர் உற்பத்திப் பணிகளை 50 சதவீத ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம் * பால் உற்பத்தி மற்றும் விநியோகம் வழக்கம் போல நடைபெறலாம் * ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்படி வங்கிகள், ஏ.டி.எம்-கள் செயல்படும் * கல்வி நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம் * அத்தியாவசியப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்க தடை இல்லை * ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி * 100 நாள் வேலை திட்டத்தின்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் * ஊரகப் பகுதியில் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்கலாம் * ஊரகப் பகுதியில் சிறு, குறு தொழில் சார்ந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் * லாரிகள் பழு

கொரோனா நிதி! 3 கோடி கொடுத்ததற்கு வருத்தப்பட்ட லாரன்ஸ் காரணம் தெரியுமா?

Image
3 கோடி கொடுத்ததற்கு வருத்தப்பட்ட லாரன்ஸ் காரணம் தெரியுமா? அனைவருக்கும் வணக்கம் நிவாரணநிதிக்கு நான் அளித்த பங்களிப்பிற்கு எனக்கு வாழ்த்துக்களைக் கூறிய நண்பர்கள், ரசிகர்கள், திரையுலக நண்பர்கள், மீடியா நண்பர்கள் அனைவருக்கும் மிகப் பெரும் நன்றி. உங்கள் அனைவரின் அன்பு என்னை மூழ்கடித்துவிட்டது. இந்த நன்கொடைக்குப் பிறகு ஸ்டன்ட் கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் பலர் இன்னும் உதவிகள் செய்யுமாறு  என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். பொதுமக்களிடம் இருந்தும் எனக்கு கடிதங்கள், வீடியோக்கள் வந்துள்ளன. அவற்றையெல்லாம் பார்க்கம் போது எனக்கு இதயமே நொறுங்கிவிடுவது போல் இருந்தது. அவை அனைத்திற்கும் நான் தந்த 3 கோடி ரூபாய் போதாது. எனவே, நியாயமாக என்னுடைய உதவியாளர்களிடம், என்னால் இதற்கு மேல் தர இயலாது எனவே நான் பிஸியாக இருப்பதாகச் சொல்லிவிடுங்கள் என்றேன். என்னுடைய அறைக்குச் சென்று இது பற்றி யோசித்துப் பார்த்தேன். நான் செய்தது பற்றி உண்மையில் வருத்தப்பட்டேன். நேற்று இரவு என்னால் நிம்மதியாகத் தூங்கக் கூட முடியவில்லை. பொதுமக்கள் அழுவது பற்றிய வீடியோக்கள் என்னை மிகவும் பாதித்தது. அதைப் பற்றி ஆழமாக யோசித்

இவர்களோடு கதைய கேட்டா கண் கலங்குவீர்கள்..

Image
இவர்களைப் போல் நம்மால் ஒருநாள் கூட வாழ முடியாது கதையை கேட்ட அதே கண்கள் கலங்குகிறது. ஹரிஹர சுதன் தங்கவேலு என்கின்ற சாமானிய மனிதனின் வார்த்தை. எனது வீட்டின் எதிர்த் தெருவில் ஒருவர் கொரானாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் பாசிடிவ் என உறுதி செய்யப்பட்ட சில மணி நேரங்களில் வீதி முழுவதுமாக முடக்கப்பட்டுவிட்டது. ஒரு நாளில் இரண்டு முறை சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக வந்து அனைவரின் உடல் நலம் விசாரிக்கிறார்கள். கனரக வாகனங்களில் மருந்துகள் தினசரி பீய்ச்சி அடிக்கப்படுகின்றன. இது அனைத்தும் முறையாக நடைபெறுகிறதா !  என சுகாதாரத்துறை அதிகாரிகள் தினமும் வந்து பார்க்கிறார்கள்.  மூன்று பேர் கொண்ட காவலர் குழு வீதியின் இருமுனை களையும் 24 மணி நேரமும் கண்காணிக்கிறார்கள். முதல் நாள் கடும் வெயிலிலும் அப்படியே நின்றிருந்தார்கள். எங்கள் வீட்டிலிருந்து சேர்கள் தந்தோம். அமர்ந்தார்கள். இரவு ஒரு மூன்று மணி இருக்கும். வீட்டுக் காமிராவில் பார்த்தேன். கொசுக்கடியில் நொடிக்கொரு முறை எழுந்து எழுந்து அமர்ந்திருந்தார்கள். ஒரு பெரிய காற்றாடி வீட்டில் இருந்தது. எடுத்துப் போட்டிருக்கிறேன். நன்றி என்றார்கள்.  க

கமலஹாசனுக்கு சாமானியன் எழுதும் லெட்டர் , மடல் , இல்லை கடிதம்னே வெச்சுங்கோங்க

Image
கமலஹாசனுக்கு சாமானியன் எழுதும் லெட்டர் , மடல்  , இல்லை கடிதம்னே வெச்சுங்கோங்க வணக்கம், உலகமே ஆபத்தான நிலையில் இருக்கும் போதும் நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். அதற்கு காரணம் யார் என்பதை நீங்களும் நானும் நாடே அறியும் தாங்கள் பிரதமருக்கு எழுதியதாக நாளிதழ் ஊடகங்களில் வெளியான செய்தி பார்த்தேன் ஊரடங்கு அறிவித்து பத்து நாட்களுக்கு பிறகு முன் திட்டமிடல் இல்லை என இப்போது கடிதம் எழுதி பிரபலமாக்க வேண்டிய அவசியம்  என்ன ?  நீங்ள் சொன்னதை வாதத்திற்காக சரி என நினைத்தாலும் இதை ஏன் ஊரடங்கு அறிவித்த அன்றே ஏன் சொல்லவில்லை அன்று சொன்னால் மக்கள் முழு மனதோடு ஊரடங்கை வரவேற்கிறார்கள். உங்கள் அரசியல் பேச்சு செல்லாக்காசாகி விடுமோ என்ற அச்சமோ இத்தனை நாள் காலதாமதம் ஊரடங்கு பாதி நாட்களை தாண்டிய பின் பொதுவாக எல்லோருடைய மனதிலும் எழும் ஒரு வித சலிப்பு தேவை பாதிப்பை நீங்கள் அரசியலாக்க நினைக்கும் எண்ணம் இப்போது நீங்கள் சொல்வதில்  புரிகிறது சமைக்க எண்ணெய் இல்லாதவனை விளக்கேற்ற சொல்கிறீர்களே என ஜீவ காருண்ய வசனம் எழுதியுள்ள நீங்கள் சொல்வது போல சாப்பாட்டிற்கே வழியில்லாதவன் வாழும் நாட்டில் சினிமா எதற்க

நெல்லிக்காயில் உள்ள சத்துக்களும் அதன் நன்மைகளும்

Image
நெல்லிக்காயில் உள்ள சத்துக்களும் அதன் நன்மைகளும். வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு  வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய்  தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் நோய்களையும் கட்டுப்படுத்தும். நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்பு  சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும்  இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.   தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்கள் சாப்பிடும்போது வெறும் நெல்லிக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன் மூலம்  அதில் இருக்கும் துவர்ப்புத் தெரியாது. நெல்லிக்காயை பச்சையாக சாப்பிடும்போதுதான் அதன் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு  நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காய் வரை சாப்பிடலாம்.   நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய

ரஜினியின் சிறுகதை

Image
வணக்கம் இன்று நாம் நமது பக்கத்தில் ஒரு கதையை பார்க்கப் போகிறோம். இது திரு ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் பத்திரிகையில் விழா மேடையில் சொன்ன ஒரு சிறிய கதை. ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பால் வியாபாரி வியாபாரம் செய்து கொண்டிருந்தான் அவன் தன்னிடம் இருந்த மாடுகளிடம் இருந்து வரும் பால் விலை வைத்து தரமான பால்களை விற்பனை செய்து வந்தார் எப்பொழுதும் போல தொழில்களில் வரும் போட்டி போல அவர் தொழில் போட்டி வந்தது அவருக்கு எதிராக ஒருவர் கலப்படம் செய்து குறைந்த விலையில் பாலை விற்பனை செய்தார். தரமான பாலை விற்பனை செய்தவர் பத்து ரூபாய் எனவும் கலப்படம் நிறைந்த பாலை விற்பனை செய்தவர் எட்டு ரூபாய் எனவும் விற்பனை செய்துள்ளார் இதனால் தரமான பால் விற்பனை செய்தவருக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தன. இப்படியே சென்று கொண்டிருந்த பொழுது மீண்டும் ஒருவர் கலப்படம் நிறைந்த பாலை விற்பனைக்கு கொண்டு வந்தார் அவர் அதிக கலப் படத்துடன் ஆறு ரூபாய்க்கு விற்பனை செய்தார். இதனால் அந்த நேர்மையான பால் வியாபாரிக்கு வாடிக்கையாளர்களுடன் தொழில் நஷ்டம் அடைந்தது இருந்தாலும் தனக்கு இருக்கும் சில வாடிக்கையாளர்களுக்கு கு